டிடிஎப் வாசன் உடன் ரொமான்ஸ் பண்ணப்போகும் நடிகை இவரா???

by vignesh

 மஞ்சள் வீரன் படத்திற்காக தயாராகி வருகிறார் டிடிஎப் வாசன். இதற்காக நடிப்பு பயிற்சியும் அவர் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதில் அவருடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

மஞ்சள் வீரன் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அப்படத்தில் டிடிஎப் வாசனுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற கேள்வி எழுந்து வந்தது. அதற்கு விடை அளிக்கும் விதமாக, யூடியூப் பிரபலம் அமலா ஷாஜி தான் டிடிஎப் வாசனுக்கு ஜோடியாக மஞ்சள் வீரன் படத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த எந்தவித அப்டேட்டையும் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அறிவித்தால் தான் இது உண்மையா இல்லை வழக்கம்போல் வதந்தியா என்பது தெரியவரும்.

You may also like

Leave a Comment