ரெட்ரோ லுக்கில் மிரட்டும் அஜித்…

by vignesh

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62வது படமாக உருவாகும் இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. விரைவில் சென்னை திரும்பவுள்ள விடாமுயற்சி டீம், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்தியாவின் முக்கியமான சிட்டியில் நடத்த பிளான் செய்துள்ளதாம்.

இந்தப் படத்தை அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அடிக்கடி அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள போட்டோவில், அஜித்தின் லுக் தாறுமாறாக உள்ளது. வழக்கமாக சால்ட் & பெப்பர் லுக்கில் அசத்தும் அஜித், இந்தமுறை இன்னும் கெத்து காட்டியுள்ளார். அதாவது கோட், சூட் காஸ்ட்யூமில் கூலர்ஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ள அஜித், தலையில் ரெட்ரோ ஸ்டைல் தொப்பியும், கழுத்தில் எம்ஜிஆரை போல ஒரு துண்டும் சுற்றியுள்ளார்.

அஜித்தின் புகைப்படங்கள் இப்படி வெளியாவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment