அரசியலில் களமிறங்குகிறாரா அஜித்???

by vignesh

கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ளது விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. அஜித்தின் பிறந்தநாளில் விடமுயற்சி என்ற டைட்டிலை அறிவித்தனர் .

சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட லைகா சுபாஸ்கரன், விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்தப் படம் தங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்றும் கூறியிருந்தார்.

அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.அதில் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் அரசியல்வாதிகள் தோற்றத்தில் உள்ள இருவருடன் அஜித் புகைப்படம் எடுத்துள்ளார். அஜித்தும் வெள்ளை சட்டை, கூலர்ஸ் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக காணப்படுகிறார். இந்த போட்டோவை ரசிகர்கள் வைரலாக்கி வரும் நிலையில், அஜித் அரசியலில் களமிறங்கப் போகிறாரா எனவும் கமெண்ட்ஸ்கள் பறந்து வருகின்றன. அரசியல் குறித்து வெளிப்படையாக எந்த கருத்தும் சொல்லாத அஜித், அரசியல்வாதிகளுடன் போட்டோ எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த போட்டோவை வைத்துக்கொண்டு அஜித்தையும் விரட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

You may also like

Leave a Comment