எல்லோரும் அரசியலுக்கு வந்தா? நாடு நாசமா போகும்.. அஜித் அட்வைஸ்

by vignesh

விஜய்யின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். அதே போல பல அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி தொடங்குவது எளிது, தொடர்வதுதான் கடினம். தொடங்கும்போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை இருந்தது என்றால் யார் வேண்டும் வெல்லலாம். அதில் விஜய் மட்டும் விதிவிலக்கு கிடையாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அரசியலில் நுழைந்துள்ள விஜய்க்கு, நடிகர் அஜித்தின் ஆதரவு இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அஜித் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வருகிறது. அதில், தொகுப்பாளராக இருக்கும் சந்தானம், உங்களுக்கு பின்னால், மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கு, இவர்களை நீங்க சினிமாவிற்கு மட்டுமே பயன்படுத்தப்போறீங்களா இல்லை, அரசியலுக்கு வருவீங்களா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்துள்ள அஜித், தலைவர்கள் எப்போதும் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆனால், நாடு நல்லா இருக்கணும் என்பதற்காக எல்லோரும் அரசியலுக்கு வந்தா? அது சரியானதாக இருக்காது. என்னை பொருத்த வரைக்கும், அவர் அவர்களின் கடமையை அவர்கள் சரியாக செய்தாலே நாடு நல்லா இருக்கும் என்று கூறிய பழைய வீடியோ இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

 

You may also like

Leave a Comment