கடைக்குட்டி சிங்கம் கார்த்தி அக்காவுக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்!!

by vignesh

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதை இப்போது நடிகைகள் வெளிப்படையாக பேசுவதால் வெட்ட வெளிச்சமாகி விட்டது. தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சரை அவர்களே யூடியூப் வாயிலாக கூறி வருகிறார்கள். அந்த வகையில் கடைக்குட்டி சிங்கம் பட நடிகை ஒருவர் தனக்கு நடந்த பிரச்சனையை கூறியிருக்கிறார்.

நானும் இதை அனுபவித்திருக்கிறேன் என கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் அக்காவாக நடித்த நடிகை ஜீவிதா கூறியிருக்கிறார். சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்த ஜீவிதா வெள்ளித்திரையிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மிகவும் துணிச்சலான நடிகையான இவர் எதுவாக இருந்தாலுமே வெளிப்படையாக பேசுவார்.

அந்தவகையில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது ஒரு நாளைக்கு 40,000 என சம்பளம் பேசப்பட்டது. ஆனால் அதற்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். தயவு செய்து என்னால் அதெல்லாம் முடியாது என்று சொன்னவுடன் ஒரு நாளைக்கு நடிப்பதற்கு மட்டும் சம்பளம் 10,000 என்று கூறினார்கள்.

அது தனக்கு போதும் என அந்த படத்தில் நடித்ததாக ஜீவிதா கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை சமீபத்தில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் ஒன்றில் கூறியிருந்தார். இதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர். இப்படியும் நடிகைகளுக்கு டார்ச்சர் கொடுப்பார்கள் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

You may also like

Leave a Comment