‘அடியே’ ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் லவ் ஸ்டோரி- ஜி.வி.பிரகாஷ்

by vignesh

ஜி.வி.பிரகாஷ், கவுரி கிஷன் இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’. இதை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு, மதுமகேஷ், ஆர்ஜே விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். வரும் 25-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது: ‘அடியே’ ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் லவ் ஸ்டோரி. அதுவே ஒரு சவாலாக இருந்துச்சு. இயக்குநர் திடீர்னு ‘சென்னையில் பனி மழை பொழியும்.. கார்கள் பறக்கும்’ என்பார். ‘‘எப்படி இதை விஷுவலா பண்ணுவீங்க?’’ என்று இயக்குநரிடம் கேட்பேன். அதை சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். வழக்கமானதாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான படம் பண்ணலாம் என்று நினைத்தேன். ‘அடியே’ படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது நல்ல டீம். வெங்கட் பிரபுவுடன் இதில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு இடைவெளியில் இருவரும் இசை பற்றி பேசுவோம். இளையராஜா சார் பாடல் பற்றி பேசியிருக்கிறோம். ஜஸ்டின் பிரபாகர் சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார்.

You may also like

Leave a Comment