போனை புடுங்கி எறிந்த பாலிவுட் பிரபலம்… வட இந்திய சிவக்குமாரா இவரு!!!

by vignesh

சதீஸ்கரில் உள்ள பிலாய் நகரில் உள்ள கல்லூரி இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தி இருந்தார். இதன் போது ஷாருக்கான் நடித்த டான் படத்தில் ஆஜ் கீ ராத் என்ற பாடலை ஆதித்யா பாடிக் கொண்டிருந்தபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இவ்வாறு குறித்த மேடையில் ஆதித்யா  பாடிக் கொண்டிருக்கும் போது , அவரை சுற்றி பல ரசிகர்கள் போனில் செல்பி எடுக்க முனைந்துள்ளனர்.

அப்படி செல்பி எடுத்த ஒரு ரசிகரின் போனை வாங்கி பிடுங்கிய ஆதித்யா , அதனை அந்த கூட்டத்திற்கு நடுவே வீசிவிட்டு, ஒன்றுமே நடக்காதது போல் தொடர்ந்து பாடலை பாட ஆரம்பித்துள்ளார்.

பாடகரின் இந்த செயற்பாடு பலரையும் முகம் சுளிக்கும் வண்ணம் செய்துள்ளது. அது போலவே அவரின் இசையை ரசிக்க சென்ற பல ரசிகர்களுக்கும் இது ஒரு சரியான பாடம் என நெட்டிசன்கள் தமது கருத்துக்களை குவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment