சூர்யாவுடன் ஜோடியாகும் அதிதி ஷங்கர்…

by vignesh

முன்னணி ஹீரோவான சூர்யாவுடன் அதிதி ஷங்கர் கைகோர்க்க போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. கங்குவா படத்திற்குப்பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் துல்கர் சல்மானும் நடிக்கிறார். மேலும் தற்போது இப்படத்தின் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

தம்பி கார்த்திக்குடன் விருமன் படத்தில் நடித்திருந்த அதிதி சங்கர் தற்போது அண்ணன் சூர்யாவுடன் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

You may also like

Leave a Comment