விஜய்க்கு தங்கச்சியாக நடிக்கும் வனிதா விஜயகுமார்???

by vignesh

விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மூன்று திருமணங்களை செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்துமே பிரிவில் முடிந்தன. இதற்கிடையே நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் வனிதா மீது தொடர்ந்து சர்ச்சை வாசம் அடித்துக்கொண்டே இருக்கும்.

இந்தச் சூழலில் அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறிய வனிதா, அதில் முதல் படமாக அநீதி வெளியாகியுள்ளது. அனைத்து படங்களும் நல்ல கதைகளாகவும், தனக்கு அமைந்த கேரக்டர்கள் சிறப்பானவையாகும் இருக்கின்றன. எஸ்.பிக்சர்ஸ் பேனரில் வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும் அறிமுகமானது பெருமையாக இருக்கிறது என கூறினார்.

அதேபோல் விஜய்க்கு சகோதரியாக நடிப்பீர்களா என கேட்கிறீர்கள். விஜய்க்கு சகோதரியாக என்னால் நடிக்க முடியாது. அது ஒர்க் அவுட்டும் ஆகாது. அவருக்கு தாயாகக்கூட நடிப்பேன். ஆனால் கண்டிப்பாக சகோதரியாக நடிக்க மாட்டேன். அதுமட்டுமின்றி விஜய் தம் அடித்தால் எதிர்க்கிறார்கள் என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருக்கின்றனது. இது பொது அறிவு இல்லாத விஷயம். கதைக்கு தேவை என்றால் செய்யத்தான் வேண்டும். நடிகர்களை குறை சொல்லாதீர்கள்” என்றார்.

You may also like

Leave a Comment