வயாகரா பத்தி பேசிய சந்தானம் !!!!

by vignesh

கிக் படம் 100 வயாகராவுக்கு சமம் என்று கிக் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சந்தானம் கலகலப்பாக பேசியுள்ளார்.

நவீன் ராஜ் தயாரிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கிக். சந்தானம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

கிக் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சந்தானம் டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி, இயக்குனர் பேசும் தமிழ் ரொம்ப பிடிக்கும். சென்னை தமிழும், கர்நாடக தமிழும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். எனக்கு அந்த ஸ்லாங் ரொம்ப பிடித்தது. ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடிப்பது சாதாரண விஷயமல்ல. எனக்கே இந்த படம் ரொம்ப வித்தியாசமான படமாக தான் இருக்கும்

.இந்த படத்தில் காமெடியன்கள் எல்லாரும் இருந்தாலும், இந்த படத்தில் சந்தானத்தை ஹீரோவாக காட்டியுள்ள படம். கிக் படம் 100 வயாகராவுக்கு சமமான விஷயம். ஒரு பாடலில் நிறைய பெண்களுடன் டான்ஸ் ஆடியதால் செந்தில் சார் ரொம்ப சந்தோஷமாக இருந்தாரு என்று கிக் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சந்தானம் கலகலப்பாக பேசினார்.

 

You may also like

Leave a Comment