ஆன்மீக சுற்றுலா… சமந்தா க்யூட் போட்டோ…

by vignesh

நடிகை சமந்தா கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

கோவை ஈஷா யோக மையத்தில் அவர் தியானம் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தில் மற்றவர்களுடன் இணைந்து அவர் காணப்பட்டார். மேலும் அந்த மையத்தின் அழகான இயற்கை காட்சிகளையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் வேலூர் பொற்கோயில், கோவை ஈஷா யோக மையம், பண்ணாரி அம்மன் கோயில் என சுற்றிவந்தார் சமந்தா. தற்போது இந்தோனேசியாவின் பாலித் தீவில் நண்பர்களுடன் அவரை பார்க்க முடிகிறது. சிகிச்சையில் ஈடுபட்டால் இத்தகைய சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள முடியாது என்பதால் அவர் முன்னதாகவே தன்னுடைய ஆன்மீக மற்றும் மகிழ்ச்சிச் சுற்றுலாக்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment