கொஞ்ச நேரத்துக்கு 30 லட்சம் ரூபாயா???

by vignesh

அமெரிக்காவுக்கு சென்றிருக்கும் சமந்தா குறித்து வெளியாகியிருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது

விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தனக்கான க்ரேஸை ரசிகர்கள் மத்தியில் ஏற்றினார் சமந்தா. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட்டானார். ஆனால் அவரே எதிர்பார்க்க சூழலில் மையோசிடிஸ் நோய் வந்தது. இதனால் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓரளவு அந்த நோயிலிருந்து மீண்டார்.
அமெரிக்கா சென்றிருக்கும் சமந்தா அங்கு குஷி படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது அந்த ப்ரோமோஷன் குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியத்திலும்,அதிர்ச்சியிலும் தள்ளியிருக்கிறது. அதாவது ஒரு படத்தின் ப்ரோமோஷன் என்றால் படத்தில் நடித்த நடிகையோ, நடிகரோ பணம் வாங்காததுதான் வழக்கம்.

ஆனால் சமந்தாவோ சில மணி நேரம் மட்டுமே நடக்கவிருக்கும் ப்ரோமோஷனுக்காக 30 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறாராம். அதுமட்டுமின்றி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு விற்கப்படும் டிக்டெட் இந்திய மதிப்பின்படி 12 ஆயிரம் ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய்வரை விற்கப்படுகிறதாம். இதில் இரண்டு லட்சம் ரூபாய் டிக்கெட்டை வாங்கும் ரசிகர் அந்த நிகழ்ச்சியில் சமந்தாவின் அருகில் அமரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் சமந்தாவின் அட்ராசிட்டி ரொம்ப இருக்கே என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

You may also like

Leave a Comment