“மீம்கள், எடிட் வீடியோக்கள்”- ரவீனா ரவி நெகிழ்ச்சி!!!

by vignesh

 “கடந்த 3 நாட்களாக இணையத்தில் உலா வந்த மீம்களையும், வீடியோ எடிட்களையும் கண்டு ரசித்தேன்” என ‘மாமன்னன்’ படத்தில் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரத்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த ரவீனா ரவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் கதாபாத்திரத்துக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. கனவில் கூட நினைக்கவில்லை. ஜோதி எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவளாக இருப்பாள். மாரி செல்வராஜ், ஃபஹத் ஃபாசிலுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “கடந்த 3 நாட்களாக இணையத்தில் உலா வந்த மீம்களையும், வீடியோ எடிட்களையும் கண்டு ரசித்தேன். வசனமில்லாமல், திரையில் குறைவான நேரம் தோன்றியபோதிலும் அது ஒரு பிரச்சினையில்லை என்பதை நம்பினேன். உங்களின் அன்பு என்னுடைய நம்பிக்கை சரி என்பதை நிரூபித்துள்ளது. நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment