பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியல… கண் கலங்கிய நளினி!

by vignesh
actress-nalini-shared-her-emotional-personal-life

ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்தில் அறிமுகமான நளினி, மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்தார்.

ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பின் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி.

நடிகை நளினி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சினிமாவிற்கு வந்தது குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார். அதில் நானும் அவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதும் குடும்பத்தை சமாளிப்பது சிரமமாக இருந்தது. அப்போது என் இரண்டு குழந்தைகளும் பெரிய ஸ்கூலில் படித்துக்கொண்டு இருந்தனர். என்னால ஸ்கூல் பீஸ் கட்ட முடியாததால் என் இரண்டு குழந்தைகளும் கோபிலா மடத்தில் சேர்ந்து படித்தார்கள்.

விவாகரத்திற்கு பின் மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து கிருஷ்ணதாசி என்ற சீரியலில் நடித்தார். அதன்பின்,சின்னத்திரையில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, கோலங்கள் ஆகிய சீரியல்களில் நடித்து வந்த நளினி, ஜெயம் படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் நுழைந்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்

You may also like

Leave a Comment