நடிகை கல்யாணியின் பரிதாப நிலை!!!

by vignesh

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான VJ கல்யாணி அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.

அதன்பின் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடக்கக்கூட முடியாமல் செவிலியர்களின் துணையுடன் நடந்து வரும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு என் முதுகுத் தண்டுவட நிபுணரிடம் ஆலோசனை செய்தேன். அப்போது அவர், இதற்கு முன் நடந்த அறுவை சிகிச்சையில் குணமாகவில்லை, இதனால், இந்த முறை ஸ்க்ரூவை அகற்றிவிட்டு இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.

மேலும் சிகிச்சை முடிந்த நிலையில் எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், என்னை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்களுக்கும் மிகவும் நன்றி. நான் என் உடலை இனி முன்பைவிட நன்றாக கவனித்துக்கொள்வேன் விஜே கல்யாணி உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் விரைவில் குணமடைய அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment