டாக்டர் ஆன ஆக்டர்!

by vignesh
80களின் இளசுகள் ஜீஜியை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். காரணம், இரண்டே பாடல்கள் அவரை இன்று வரை சுமந்து வந்து கொண்டிருக்கின்றன. ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘பனி விழும் மலர்வனம்’ பாடல்களை இளையராஜாவின் இசையில் கேட்கும்போதெல்லாம், ஜீஜி மனசுக்குள் உலா வருவார். இரண்டு பாடல்களின் வரிகளையும் தலைப்பாகக் கொண்டு படங்கள் வெளிவந்திருக்கின்றன.
1982ல் வெளிவந்த படம் ‘நினைவெல்லாம் நித்யா’. யதார்த்தமான காதல் கதைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீதர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய படம். இயற்பெயர் ஜெயலட்சுமி. ஜீஜியின் வருகையை அன்றைய சினிமா கொண்டாடியது
நடிக்கும்போது அவர் மருத்துவத்தில் இளம்கலை பட்டம் பெற்றிருந்தார். அதன்பிறகு மேல்படிப்பு படித்து மருத்துவத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.இன்றைக்கு சென்னையில் உள்ள முக்கிய பெண் மருத்துவர்களில் அவரும் ஒருவர். யுனிசெப் போன்ற சர்வதேச மருத்துவ அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். சர்வதேச அளவில் செயல்படுத்தப்படும் மருத்துவத் திட்டங்களில் பணியாற்றி வருகிறார். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக பெரும்பாங்காற்றி வருகிறார்.
எல்லோரும் ஆக்டராகி விட முடியும். எல்லோராலும் நல்ல டாக்டராகி விட முடியாது. அந்த வகையில் ஜீஜி சினிமாவை விட்டு விலகியதும் நல்லதுக்குத்தான். சமூகத்துக்கு ஒரு நல்ல மருத்துவர் கிடைத்தார். நடிகை ஜீஜி இன்று டாக்டர் ஜெயலட்சுமி டாக்டராக கம்பீரமாக வலம் வருகிறார்.

You may also like

Leave a Comment