சுசி லீக்சால் சாக போயிட்டேன் அனுயா பரபரப்பு தகவல்…

by vignesh

ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் அனுயா.

அனுயா இந்த படத்திற்கு பின்னர் நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதன் பின்னர் பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதற்கு பிறகு அவர் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.

 

பாடகி சுசித்ரா வெளியிட்ட தவறான வீடியோ பரபரப்பை கிளப்பியது நமக்கு நன்றாகவே தெரியும். இதனால் அனுயா பகவத் சர்ச்சையில் சிக்க சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார்.
 அண்மையில் ஒரு பேட்டியில் அனுயா பேசும்போது, அந்த மார்பிங் வீடியோவால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன், அந்த நேரத்தில் பிரச்சனையை நான் எப்படி எதிர்கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை.

 

உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் கூட வந்தது, ஆனால் அந்த எண்ணத்தை மாற்றியது குடும்பம் தான். அவர்கள் இல்லை என்றால் நான் இன்று உயிரோடவே இருந்திருக்க மாட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

You may also like

Leave a Comment