7ஜி ரெயின்போ காலனி 2வில் ஹீரோயின் யார் தெரியுமா?

by vignesh

ரவிகிருஷ்ணாவை வைத்து 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தை செல்வராகவன் இயக்கப் போவதாகவும் அதில் நடிக்கப் போகும் இளம் நடிகை குறித்த தகவல்களும் தற்போது கசிந்துள்ளன.

செவன் ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவிகிருஷ்ணா கேடி, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்தும் அவருக்கு எந்தவொரு வெற்றியும் கிடைக்கவில்லை. கடைசியாக தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்த ரவிகிருஷ்ணாவை வைத்து மீண்டும் செவன் ஜி ரெயின்போ காலனி 2வை உருவாக்க செல்வராகவன் முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

த்ரிஷா நடித்த ராங்கி படத்தில் சின்ன பாப்பாவா நடித்த அன்ஸ்வரா ராஜன் தான் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடி என்கிற தகவல்களும் கசிந்துள்ளன.

20 வயதே நிரம்பியுள்ள அன்ஸ்வரா ராஜன் ராங்கி, தக்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பத்மினி படத்திலும் அன்ஸ்வரா ராஜனின் நடிப்பு சிறப்பாக இருந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி 2வில் இளைஞர்களை வெகுவாக கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment