துப்பறிவாளன் 2 படத்தை தூசி தட்டிய விஷால்…

by vignesh

ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷால். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகயுள்ள ரத்னம் படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ போன்றவை மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் ஏப்ரல் 26ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார் விஷால். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பிப்ரவரி 1ம் தேதி லண்டனுக்கு விஷால் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை மிஷ்கின் இயக்க, முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இணைந்து சூட்டிங் துவங்கப்பட்டது. படத்தின் சூட்டிங் லண்டனில் நடந்துவந்த நிலையில், மிஷ்கின் மற்றும் விஷாலுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படத்தை விஷால் தயாரித்துவந்த நிலையில், படத்திலிருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார். இதையடுத்து இந்தப் படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளதாக விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் வேலைகளை அவர் துவங்கியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment