வசூல் வேட்டைக்கு விஜய்யின் லியோ ரெடியா ??

by vignesh

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் இன்னும் 6 நாட்களில் வெளியாக உள்ள நிலையில், புக் மை ஷோவில் சற்றுமுன் டிக்கெட் புக்கிங் சில தியேட்டர்களில் தொடங்கியது. டிக்கெட் புக்கிங் தொடங்கியதுமே டோட்டல் ரெட்டாக மாற்றி விஜய் ரசிகர்கள் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு டிக்கெட் புக்கிங் நேற்று முதல் ஒரு சில திரையரங்குகளில் தொடங்கிய நிலையில், தற்போது அனைத்து இடங்களிலும் டிக்கெட் புக்கிங் பல திரையரங்குகளில் ஆரம்பித்துள்ளன.

புக் மை ஷோ செயலிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகள் லியோ படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி உள்ளன. ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே லட்சக் கணக்கில் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருவதாக ரசிகர்கள் ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். புக் மை ஷோவில் ஓபனாகி உள்ள தியேட்டர்கள் எல்லாமே சில நிமிடங்களிலேயே சிகப்பு நிறத்தை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத அளவுக்கு லியோ படத்தின் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடிகர் விஜய் நடத்தப் போவது உறுதியாகி உள்ளது.

You may also like

Leave a Comment