கங்குவா படம் குறித்து அப்டேட் கொடுத்த சூர்யா!!!

by vignesh

நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கங்குவா. நெருப்பின் மகன் என்று இந்த டைட்டிலுக்கு அர்த்தம் என்று தனது பேட்டியொன்றில் படத்தின் இயக்குநர் சிவா கூறியிருந்தார். அந்த அளவில் இந்த படத்தில் சூர்யாவின் இரண்டு கேரக்டர்களும் ஃபயராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சூர்யாவின் பிறந்தநாளையொட்டி கடந்த மாதத்தில் படத்தின் போஸ்டர், ப்ரமோ என அடுத்தடுத்து வெளியாகி மிரட்டலாக அமைந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் குறித்தும் சூர்யா தற்போது பேசியுள்ளார். இன்றைய தினம் ரசிகர்களுடன் உரையாடிய அவர் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சூர்யா இணைந்துள்ள கங்குவா படம் எதிர்பார்ப்பை காட்டிலும் 100 சதவிகிதம் சிறப்பாக வந்துள்ளதாகவும் சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படம் குறித்து அவ்வப்போது படக்குழுவினர் சிறப்பான விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவும் மிகப்பெரிய மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

Actor Suriya updates about Kanguva and his next movies updates in his Fans meet

You may also like

Leave a Comment