ரஜினியை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்…

by vignesh

நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து உருவாகியுள்ள ஜெயிலர் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்தில் பான் இந்தியா படமாக ஜெயிலர் வெளியாகவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தின் ட்ரெயிலர் மற்ற மொழிகளிலும் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக ரஜினி நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்துள்ளார். படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ரஜினியின் ஜோடியாக இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். படையப்பா படத்தை தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. படத்தில் நடிகர் சுனில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் கொடுத்துள்ள பேட்டியொன்றில் ரஜினி போன்ற எளிமையான மனிதரை தான் இதுவரை சந்தித்ததில்லை என்று பாராட்டு தெரிவித்துள்ளார். ரஜினியிடம் கற்றுக் கொள்வதற்கு அதிகமான விஷயங்கள் உள்ளதாகவும் சுனில் கூறியுள்ளார்.

ரஜினியின் ஆரா மிகவும் சிறப்பானது என்று தெரிவித்துள்ள சுனில், தனக்கும் ரஜினிக்கும் இடையிலான காம்பினேஷன் காட்சிகள் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment