சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

by vignesh

நடிகர் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய தந்தை டிஆர் இயக்கத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து சிறுவனாகவும் இளைஞனாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சிம்பு, இயக்குநராகவும் தன்னை மன்மதன் உள்ளிட்ட படங்களில் சிறப்பாக வெளிப்படுத்தினார். மேலும் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார் சிம்பு. சிறிய வயதிலேயே ஏராளமான படங்களில் நடித்து முடித்துள்ளார்.

சிம்புவிற்கு சில படங்கள் கைக்கொடுக்காத நிலையில், கடந்த 2021ம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் வெளியானது வெந்து தணிந்தது காடு படம். படத்தில் சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் அடுத்ததாக STR48 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், நீண்ட தலைமுடியை வளர்த்து ஸ்டைலாக மாறியுள்ளார். பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியிலும் இவரை இந்த லுக்கில்தான் பார்க்க முடிந்தது. இதனிடையே வரலாற்று பின்னணில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசனும் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தன்னுடைய சமீபத்திய க்ளிக்ஸ்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிம்பு. படங்கள் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக அமைந்துள்ளன.

You may also like

Leave a Comment