நடிகர் பாண்டியனை நியாபகம் இருக்கா???

by vignesh

1983ம் ஆண்டு வெளியான மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பாண்டியன்.

பின் தொடர்ந்து புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்கு சீமையிலே, மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு என்று 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அந்த காலத்தில் முக்கிய நடிகராக இருந்த பாண்டியன் அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின் பட வாய்ப்புகள் குறைய இவர் சின்னத்திரையிலும் நுழைந்து நடித்தார்.

ஆனால் இவர் 2008ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 80, 90களில் பிறந்தவர்களுக்கு இவருடைய எதார்த்த நடிப்பும், முக பாவனையும் பிடித்த ஒன்று.

 

You may also like

Leave a Comment