வெளியானது மணிகண்டனின் லவ்வர் ட்ரெய்லர்!

by vignesh

மணிகண்டன், ஸ்ரீ கெளரி ப்ரியா, கண்ணா ரவி, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லவ்வர் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது.

லவ்வர் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள லவ்வர் படத்தில் மணிகண்டனின் நடிப்பு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதலர்களுக்கு இடையேயான ஈகோ, பிரேக்-அப், ரொமான்ஸ் என வழக்கமான காதல் பின்னணி படமாக இருந்தாலும், ரசிகர்களிடம் இது வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

You may also like

Leave a Comment