போலா சங்கர் ட்ரெயிலர்… மாஸ் காட்டும் சிரஞ்சீவி!

by vignesh

ஸ்டார் அந்தஸ்தை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து ஹீரோவாக அதிரடி காட்டி வருகிறார் சிரஞ்சீவி. இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 11ம் தேதி போலா சங்கர் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது போலா சங்கர் படம். தமிழில் சிவா இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ளது போலா சங்கர். இந்தப் படத்தில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நிலையில், தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏகே எண்டர்டெயின்மென்ஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள போலா சங்கர் ரிலீசுக்கு முன்பாகவே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தன்னுடைய படங்களில் இதை அதிகளவில் வைத்துவரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்தப் படத்திலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள் என அதிரடி காட்டியுள்ளார்.

You may also like

Leave a Comment