வடிவேலு நல்ல மனிதர் கிடையாது- பெஞ்சமின் ஓபன் டாக்…

by vignesh

நடிகர் வடிவேலு போராடித்தான் தற்போதைய நிலையை அடைந்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. துவக்கத்தில் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொள்ள சிறிய கேரக்டர்களில் நடித்து பின்னர் படிப்படியாக தன்னை முன்னேற்றிக் கொண்டவர் வடிவேலு. வடிவேலு காமெடிக்காகவே சிறப்பான ஓடி வெற்றிப்படங்களான ஏராளமான படங்கள் அவரது உழைப்பிற்கு சாட்சிகளாக உள்ளன. தனக்கென்று ஒரு காமெடி வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதில் ஏராளமான நடிகர்களை பயன்படுத்தி வெற்றிக் கண்டவர் வடிவேலு. அந்த வகையில் கோலிவுட்டில் எராளமான நடிகர்களை கைக்காட்டலாம்.

இந்நிலையில் சமீப காலங்களில் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார் வடிவேலு. குறிப்பாக போண்டா மணி, விஜயகாந்த் மறைவின்போது உள்ளூரில் இருந்தபோதிலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத வடிவேலுவின் செய்கை பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் வடிவேலுவுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள நடிகர் பெஞ்சமின் தற்போது வடிவேலு குறித்து பேசியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடினாலும் அதுகுறித்து வடிவேலு எதுவும் கேட்கமாட்டார் என்றும் பெஞ்சமின் குற்றம் சாட்டியுள்ளார். நான்கைந்து துணை நடிகர்கள் வடிவேலுவிற்காக காத்திருக்க வேண்டும் என்றும் அதில் ஒருவரை அவர் தேர்ந்தெடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு நாளில் ஒரு நடிகர் மட்டுமே நடிக்க வேண்டிய சூழலில் 5 பேர் வந்தால் தங்களிடம் இருந்து பாதி சாப்பாட்டில் உணவு பறிக்கப்படும் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் வடிவேலு கேரவனில் சென்று அமர்ந்துக் கொள்வார் என்றும் தாங்கள் மர நிழலிலோ சாலைகளிலோ நின்றுக் கொண்டு சாப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment