STR 48 மாஸ் அப்டேட்…

by vignesh

சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், STR 48 படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் கமிட்டாகியுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

தாய்லாந்து சென்றிருந்த சிம்பு, அதன்பின்னர் லண்டனில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்து வருகிறார். இது எல்லாமே அவரது 48வது படத்திற்காக என சொல்லப்படுகிறது. சிம்புவின் 48வது படமான STR 48 ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் பிரபலமான தேசிங் பெரியசாமி STR 48 படத்தை இயக்கவுள்ளார்.

ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பீரியட் படமாக உருவாகும் STR 48ல் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் கமல்ஹாசனும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு, இயக்குநர் தேசிங் பெரியசாமி தவிர, மற்ற நடிகர்கள், டெக்னிக்கல் டீம் குறித்த அப்டேட்ஸ் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

You may also like

Leave a Comment