5 மொழிகளில் தயாராகும் ஜெயம் ரவியின் ‘ஜீனி’

by vignesh

ஜெயம் ரவியின் 32வது பட அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.
இதுவரை அவரது கேரியரில் இல்லாத வகையில் பிரம்மாண்டமான படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் ஜெயம் ரவி.

வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவியின் 32வது படமாக உருவாகும் இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், தற்போது படக்குழு தரப்பில் இருந்து டைட்டில் அறிவிப்புடன் அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவியின் 32வது படத்துக்கு ‘ஜீனி’ (Genie) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸின் 25வது படமான ஜீனி, பான் இந்தியா மொழிகளில் உருவாகவுள்ளது. முக்கியமாக இந்தப் படத்துக்கு இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஜெயம் ரவி – ஏஆர் ரஹ்மான் காம்போ மீண்டும் இணைகிறது.

You may also like

Leave a Comment