வேட்டையன் ராஜா பராக் பராக்… ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2

by vignesh

சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘சந்திரமுகி 2’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment