லவ்வர்ஸ் டேக்கு திரைக்கு வரும் லவ்வர் படம்…

by vignesh

நடிகரும் இயக்குநருமான மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் படம் பிப்ரவரி 9ம் தேதி மோதவுள்ளது. படத்தில் மணிகண்டனுடன் ஸ்ரீகௌரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முன்னதாக மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில், லவ்வர் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தை பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ள நிலையில் இந்தப் படமும் மணிகண்டனுக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் ரொமாண்டிக் காமெடி களத்தில் உருவாகியுள்ளது.

You may also like

Leave a Comment