ரஜினியின் ரீல் தங்கை 50வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் என்ன???

by vignesh

50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் பிரபலங்கள் ஏராளம் உள்ளனர்.

அவ்வாறான நடிகைகளில் ஒருவர் தான் சித்தாரா. இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட்டான படையப்பா படத்தில் அவருக்கு தங்கையாக செளந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

கேரளத்து பைங்கிளியான சித்தாரா தற்போது தன்னுடைய 50 வயதை எட்டி உள்ளார். அதாவது இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த காதல் கை கூடாததால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

அத்தோடு அவரின் தந்தையின் பிரிவும் அவரை வாட்டிவதைக்க, திருமணம் செய்யாமல் இன்றுவரை தனியாகவே வாழ்ந்து வருகிறார் நடிகை சித்தாரா.

You may also like

Leave a Comment