‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ ட்ரெய்லர் விமர்சனம்…

by vignesh

அனுஷ்கா ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அனுஷ்காவுக்கு ஜோடியாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். இவர் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ்’ படத்தின் மூலம் பிரபலமானவர். மகேஷ் பாபு.பி இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 செஃப் ஒருவருக்கும் ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கும் இடையில் காதல் வர நேர்ந்தால் என்ன நடக்கும் என்பது படத்தின் ஒன்லைனாக தெரிகிறது. அனுஷ்கா மிஸ் ஷெட்டியாக, ஒரு சமையல் கலைஞரும் பெண்ணியவாதியுமான பாத்திரத்தில் நடித்துள்ளார். குழந்தைகளைப் பெற ஒரு ஆண் தேவை என்று நம்பும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளவோ ​​அல்லது தீவிரமான உறவில் இருக்கவோ விரும்பவில்லை. ஆனால், ஸ்டாண்ட் அப் காமெடியன் சித்து (நவீன்) திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என நினைப்பவர். இவர்களுக்கிடையிலான சம்பவங்களின் தொகுப்பாக படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. படம் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

You may also like

Leave a Comment