நடிகர் தனுஷிற்கு ரெட் கார்டா???

by vignesh

நடிகர் தனுஷ் உட்பட 14 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் என்று 15 பேர் வரை உள்ளனர்.

இந்த நிலையில் அண்மை காலமாகவே தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்புத் தராத நடிகர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் பலமுறை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதில், நடிகர் சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, யோகிபாபு, அதர்வா உள்ளிட்ட நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் சங்கத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதையடுத்து தனுஷ் உள்பட 14 நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக தனுஷ், அமலாபால், ராய் லட்சுமி உள்ளிட்ட 14 நடிகர்களின் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment