ஜவான்’ பட ராமையா வஸ்தாவையா பாடல் வெளியீடு…

by vignesh

ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் ‘ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழில் இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்தியில் விஷால் தத்லானி, ஷில்பா ராவ் ஆகியோர் பாடியுள்ளனர்.

You may also like

Leave a Comment