சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

by vignesh

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மல்டிபிளக்ஸ், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகள் என வகைப்படுத்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கட்டணம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில், மல்டிப்ளக்ஸ் ஏசி தியேட்டர் கட்டணம் ரூ.250 ஆகவும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி தியேட்டர் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.200 ஆகவும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி இல்லாத தியேட்டர் கட்டணம் ரூ.80-லிருந்து ரூ.120 ஆகவும் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரிக்லைனர் சீட் (Recliner Seat) உள்ள திரையரங்கில் 350, Epiq திரை கொண்ட தியேட்டருக்கு ரூ.400 மற்றும் ஐமேக்ஸ் திரை கொண்ட தியேட்டருக்கு ரூ.450 ஆகவும் உயர்த்த அனுமதியளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர் சங்கம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். இந்நிலையில் இந்தக் கட்டண உயர்வு பரிந்துரைக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment