சினிமாவை விட்டே விலக சமந்தா முடிவா?

by vignesh

நடிகை சமந்தா திடீரென நடிப்புக்கு ஒரு குட்டி பிரேக் விடப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டு தனியாக வாழ்ந்து வரும் சமந்தா பாலிவுட், ஹாலிவுட் என பெரிய நடிகையாக வலம் வர ஆசைப்பட்டார்.

ஆனால், திடீரென அவரை தாக்கிய மயோசிடிஸ் எனும் அரிதான நோய் பாதிப்பு அவரை நிலைகுலைய செய்தது. சுமார் 8 மாத காலம் நடிக்கவே முடியாமல் எழுந்து நடக்கவும் முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா யசோதா படத்தின் ரிலீஸ் சமயத்தில் தான் பட்ட வேதனைகளை வெளிப்படையாக பேசி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துட்டாராம்: அதே போல சில படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக் கொண்டிருந்த நிலையில், அந்த படங்களின் அட்வான்ஸையும் அவர் திருப்பிக் கொடுத்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பின்னணியில் என்ன காரணம் என விசாரணைகள் கிளம்பிய போது தான் நடிகை சமந்தா நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஒருவருஷத்துக்கு ஓய்வு: நடிகை சமந்தா புதிதாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்றும் இன்னும் ஒரு வருஷத்துக்கு ஓய்வெடுத்து தனது உடல்நிலையை முழுவதுமாக சரி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக சமந்தா கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், அதனையும் பொருட்படுத்தாமல் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து கஷ்டப்பட்டு நடித்து வந்தார். இந்நிலையில், ஓராண்டு ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் அவர் நடிக்க வருவார் எனக் கூறுகின்றனர்.

 

You may also like

Leave a Comment