கேங்ஸ்டர் லுக்கில் தனுஷ்…பூஜையுடன் தொடங்கும் D50

by vignesh

சன் பிக்சர்ஸ் தரப்பில் D50 படத்தின் பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். இந்த பூஜை நிகழ்ச்சி குறித்து விரைவில் படக்குழு தரப்பில் இருந்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சமீபத்தில் திருப்பதி சென்றிருந்த தனுஷ், தரிசனத்தை முடித்துவிட்டு மொட்டை தலையுடன் சென்னை திரும்பினார். இதே கெட்டப்பில் தான் தனது 50வது படத்திலும் நடிக்கவுள்ளாராம் தனுஷ்.
வட சென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் D 50, தனுஷ் கேரியரில் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment