கேக் வெட்டிய திவ்யபாரதி… ஊட்டி விட்ட ஜிவி பிரகாஷ்…

by vignesh

ஜிவி பிரகாஷ் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என அடுத்தடுத்த களங்களில் பயணித்து வருகிறார். நடிகராக தற்போது தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். கிங்ஸ்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார். முன்னதாக பேச்சுலர் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இவர்கள் இணைந்துள்ளனர்.

கடல் பின்னணியில் சாகச கதைக்களத்தில் தயாராகிவரும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கிவருகிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுக்கும் என்று ஜீ ஸ்டூடியோசின் தென்னிந்திய திரைப்பட பிரிவு தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால் முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் திவ்யபாரதியின் பிறந்தநாளையொட்டி கிங்ஸ்டன் படக்குழுவினர் கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜிவி பிரகாஷ், திவ்ய பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்ததோடு, அவருக்கு கேக் ஊட்டி விட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment