குக் வித் கோமாளி மணிமேகலை மதம் மாறிவிட்டாரா???

by vignesh

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலக்கிவந்த மணிமேகலை அந்த ஷோவில் இருந்து திடீரென விலகி அதன் பின் அவர் தொகுப்பாளராக மற்ற சேனல்களிலும் வேலை செய்ய தொடங்கினார்.

தற்போது அவர் குக் வித் கோமாளி ஷோவுக்கே தொகுப்பாளராக வந்திருக்கிறார்.

சர்ச்சை

மணிமேகலை டான்சரான ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது வீட்டில் வந்த எதிர்ப்பையும் மீறி மற்றொரு மதத்தை சேர்ந்த ஹுசைனை கரம்பிடித்தார் அவர்.

மணிமேகலையை அவர் மதமாற்றம் செய்து திருமணம் செய்துவிட்டார் என சர்ச்சைகளும் வந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இது பற்றி பேசி இருக்கிறார் மணிமேகலை.

“எனக்கு எல்லா கடவுளும் ஒன்னு தான். எல்லா கடவுள்களையும் வணங்குகிறேன். நங்கள் மசூதிக்கு சென்றதை விட ஜோடியாக கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிட்டு வெளியிட்ட வீடியோக்கள் தான் அதிகமாக போட்டிருக்கிறோம்” என கூறி இருக்கிறார் மணிமேகலை.

அதனால் தான் இன்னமும் ஹிந்துவாக தான் இருப்பதாக மறைமுகமாக கூறி இருக்கிறார் மணிமேகலை.

You may also like

Leave a Comment