இது தான் என்னோட ஃபேவரைட் – ஓப்பன் டாக் அதிதி ஷங்கர்

by vignesh

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்புகளை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் ஷங்கர். இவருடைய மகள் அதிதி ஷங்கர் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு இயக்குநர் முத்தையா இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில், கார்த்தி ஹீரோவாக நடித்த ‘விருமன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சிறுவயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்பதால் பெற்றோரிடம் தன்னுடைய ஆசை குறித்து எடுத்து கூறி பின்னர் அவர்களின் சம்மதத்துடன் திரையுலகின் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார்.

இவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் அதிதி ஷங்கர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்திலும், மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் மாவீரன் படத்தின் ரிலீஸிற்காக ப்ரமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.அந்த வகையில் தற்பொழுது ஓர் பேட்டியளித்துள்ளார். அதில் ஷங்கரின் மகள் என்று சொல்லும் போது நீங்க எப்படி பீல் பண்றீங்க என்று கேட்ட போது, ஷங்கர் பொண்ணு என்று சொல்லும் போது அது எனக்கு பெருமை தான் அதில ஒன்றும் எனக்கு தாழ்வு மனப்பாங்கு இல்லை. ஆனால் என்னுடைய நடிப்புத் திறமையை வெளிக் காட்டணும் என்பது தான் என்னுடைய ஆசை என்று தெரிவித்தார்.

தனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் அதை தான் வீட்டில இருக்கிறவங்களுக்கும் செய்து கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment