ஆம்புலன்ஸ் வாங்கித்தந்த KPY பாலா

by vignesh

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் KPY பாலா அதன்பிறகு குக் வித் கோமாளியில் கலந்துகொண்டு காமெடிகளால் மக்களை மகிழ்வித்து வந்தார்.

இப்போது தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியிலும், தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பிஸியாக இருக்கிறார்.

பாலா தனது சொந்த செலவில் சிறுவர்கள் படிக்க பண உதவி செய்வது, பெரியவர்களுக்கு உதவி செய்வது நிறைய நல்ல விஷயங்கள் செய்து வருகிறார் .

பாலா தனது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியுள்ளார். பிறந்தநாளன்று முதியோர் இல்லத்திற்காக ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கித் தந்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் பாலா வெளியிட அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

 

You may also like

Leave a Comment